Monday, October 10, 2011

Tambraparni Mahatmiyam

"தாமிரபரணி மகாத்மியம்' 
 ரேடியோவில் ஒலிபரப்பு
திருநெல்வேலி, செப்டம்பர் பத்தொன்பது 

               'தாமிரபரணி மகாத்மியம்' குறித்த தகவல்கள் செவ்வாய் தோறும் திருநெல்வேலி ரேடியோவில் ஒலிபரப்பப்படுகிறது,
               'தாமிரபரணி மகாத்மியம்' வேதவியாச பகவானால் எழுதப்பட்ட மிகப்பழமையான் நூலாகும். ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்திற்கு முற்பட்ட இந்நூல் சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதில் தாமிரபரணியின் உற்பத்தி, உபநதிகளின் உற்பத்தி, ஸ்தல மகாத்மியங்கள், பண்டைய மன்னர்களின் சரித்திரம், கோயில்களின் வரலாறுகள் போன்றவை அடங்கியுள்ளன.
               புதையல் போல் இருந்த இந்த அரிய நூலில் உள்ள செய்திகள் திருநெல்வேலி ரேடியோ நிலையம் சார்பில் கடந்த ஆறாம் தேதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை ஒன்பது முதல் ஒன்பதரை மணி வரை ஒலிபரப்பப்படுகிறது. இருவர் உரையாடுவதுபோல ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இசை மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களும் இடம் பெறுகின்றன. இதை கேட்பதன் மூலம் தாமிரபரணியின் பழமையான் வரலாறுகளையும், அதன் சரித்திர பெருமைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
               சுத்தமல்லியை சேர்ந்த சமஸ்கிருத பாடசாலை மாணவர்களின் ஸ்லோகமும், கர்நாடக சங்கீத பாணியியில் தாமிரபரணியை பற்றிய இசைப்பாடல்களும் இடம் பெறுகின்றன. தாமிரபரணி மகாத்மியத்தை சங்கர்ராம் தொகுத்து வழங்கியுள்ளார். உமா கனகராஜ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளார்.


குறிப்பு: மேற்கண்ட செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இந்த நிகழ்ச்சியின் பொருளைப்பற்றிய மேல்விவரங்களும், குறிப்பாக தாமிரபரணியைப் பற்றிய சரித்திர, மற்றும் புராண, இலக்கிய விவரங்கள் பற்றியும் இந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர்களிடம் தெரிந்து கொண்டு இந்த 'ப்ளாக்" மூலம் வெளியுலகிற்கு கொண்டுவர முயற்சி செய்கிறேன்.
சுத்தமல்லி மாணவர்களை அணுகி விசாரித்ததில், அவர்கள் மொத்தம் ஐம்பத்தைந்து ஸ்லோகங்கள் இந்த நிகழ்ச்சிக்காக பதிவு செய்திருப்பதாகவும் இதுவரை பன்னிரண்டு ஸ்லோகங்கள் ஒலிபரப்பப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள்.

No comments:

Post a Comment